நாளை முதல் (ONLINE) வகுப்புகள்தொடக்கம்:தெலுங்கானா அரசு..!!

 நாளை முதல் (ONLINE) வகுப்புகள்தொடக்கம்:தெலுங்கானா அரசு..!! 

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த செய்தியின் படிங்க… 

தேசிய அளவில் ஒரு திட்டம்:  ஜூலை 31க்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்- உச்ச நீதிமன்றம் அதிரடி ..!!

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து ஜூன் 21-ஆம் தேதி முதல் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் நடப்பு கல்வியாண்டு வீணாகி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment