நாட்டின் பணவீக்கம் :முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரிப்பு..!!

 நாட்டின் பணவீக்கம் :முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரிப்பு..!!

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 12.94% ஆக இருந்ததாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு April-ல் மொத்த விலை பணவீக்க விகிதம் 10.49% ஆக இருந்ததே இதற்கு முந்தைய அதிகபட்ச அளவாகும். May மாதத்தில் சில்லறை விலை பணவீக்கமும் 6.3% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத உயர்ந்த அளவு என்பதுடன் Reserve Bank நிர்ணயித்த அளவை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியையும் படிங்க… 

AADHAAR – PAN இணைப்பு: JUNE 30 கடைசி தேதி..!!  

இதற்கிடையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்படுவதே பணவீக்கம் கடுமையாக உயரக் காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்

Leave a Comment