நாடு முழுவதும் -551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்: பிரதமர் உத்தரவு..!!
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவுப்படி, நாடு முழுவதும் 551 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
இந்த மையங்கள், பொது சுகாதார வளாகங்களில் அமைக்கப்படும். இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் அந்த மாவட்டங்களுக்கு நாள் தோறும் தேவைப்படும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.