நடிகர் விவேக் ஆசையை நிறைவேற்ற தயாரான- திமுக..! குவியும் வாழ்த்துக்கள்.. !! - Tamil Crowd (Health Care)

நடிகர் விவேக் ஆசையை நிறைவேற்ற தயாரான- திமுக..! குவியும் வாழ்த்துக்கள்.. !!

 நடிகர் விவேக் ஆசையை நிறைவேற்ற தயாரான- திமுக..! குவியும் வாழ்த்துக்கள்.. !!

மறைந்த நடிகர் விவேக் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வழிகாட்டுதலுடன் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முன்னெடுத்தார். இந்தப் பணி முழுவதும் நிறைவடையும் முன்னரே மறைந்து விட்டதால், அவருடைய கனவை நிறைவேற்றுவதற்கு திமுக சுற்றுச்சூழல் அணி முன் வந்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க

10 – ஆம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு : பள்ளிக் கல்வித் துறை..!!

இது குறித்து கூறியுள்ள கார்த்திகேய சிவசேனாபதி,

“மறைந்த நடிகர் திரு.விவேக் அவர்கள் 1 கோடி மரங்கள் நடுவதைத் தன் இலட்சியமாக வைத்திருந்தார்.அதில் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பெரும் பணியைச் செய்தும் காட்டியுள்ளார்.அந்த வகையில் அவரின் உயர்ந்த இலட்சியத்தை நிறைவேற்றும் வகையில் மீதி எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நடுவதற்கு நம் கழக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளோம். இந்த நற்செயலில் ஈடுபட்ட திரு. விவேக் அவர்களின் நண்பர்களுடன் இணைந்து இது குறித்த செயல்களைக் கலந்தாலோசிக்க இருக்கிறோம்.. என்றும் போல் தாங்கள் தங்கள் நல் ஆதரவைத் தர வேண்டும். திரு. விவேக் அவர்களின் உயர்ந்த எண்ணத்தை ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment