நடப்பு ஆண்டுக்கான வகுப்புகள் & செமஸ்டர் தேர்வு தேதியை அறிவித்தது- அண்ணா பல்கலைக்கழகம்..!!

 நடப்பு ஆண்டுக்கான வகுப்புகள் & செமஸ்டர் தேர்வு தேதியை அறிவித்தது- அண்ணா பல்கலைக்கழகம்..!!

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு:

நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் எனவும் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த செய்தியும் படிங்க…

பொறியியல் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு தொடக்கம்..!! 

கொரோனா ஊரடங்கு காரணமாக பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 நடப்பு செமஸ்டரில் கடைசி வேலை நாள்:

மேலும் நடப்பு செமஸ்டரில் கடைசி வேலை நாள் நவம்பர் 30 என்றும், டிசம்பர் 2ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியும் படிங்க…

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை- 58 ஆக குறைக்க வலியுறுத்தல்..!! 

 அடுத்த செமஸ்டர் தேர்வு:

மேலும் அடுத்த செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் ஜனவரி 19-2022ம் தேதி அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment