நகையை அடகு வைத்து பணம் வாங்கும் முன்-கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!!

 நகையை அடகு வைத்து பணம் வாங்கும்  முன்-கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!! 

இந்தியாவில் தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுப்பது உண்டு.

 இந்த செய்தியையும் படிங்க…

 எச்சரிக்கை:கொரோனா 3ஆவது அலை: அக்டோபா்-நவம்பரில் உச்சத்தில் இருக்கும்..!! 

இந்நிலையில் கொரோனா நெருக்கடி காலத்தில் பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதன் காரணமாக தங்க நகையை அடகு வைத்து கடன் வாங்கி வருகின்றனர். இதனால் அவசரஅவசரமாக அடகு வைத்து பணம் வாங்கும் பலரும் நகை கடன் தொடர்பான சில விபரங்களை பார்க்காமலேயே கடன் வாங்கி விடுகின்றனர். எனவே அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம். நகைக்கடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரையிலான வரம்பில் தான் வங்கிகள் வழங்குகின்றன.

எனவே அதற்குள் கடனை திருப்பி செலுத்த முடியுமா என்பதை முதலில் பார்த்துக்கொள்ள வேண்டும். நகைக் கடன்கள் வங்கிகள், நிதி நிறுவனம், நகைக்கடை என பல்வேறு இடங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். பெரும்பாலும் வங்கிகளில் வைப்பதுதான் நம்பிக்கையானது. ஆனால் மற்ற இடங்களில் நீங்கள் வைப்பதாக இருந்தால் அந்த நிறுவனம் குறித்து முன்னரே நன்கு அறிந்து கொண்டு வாங்க வேண்டும். குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது என்பதற்காக எதுவும் விசாரிக்காமல் வாங்கி விடக்கூடாது.

 இந்த செய்தியையும் படிங்க…

 “இதையெல்லாம் செய்தாலே கொரோனா நம்மை அண்டாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!!

கடன் வாங்கும் பொழுது நகையுடைய மொத்த மதிப்புக்கும் நமக்கு கடன் கிடைக்காது. குறைந்தபட்சம் 60 சதவீதம் முதல் அதிகபட்சம் 90 சதவீதம் வரையில் தான் கடன் கிடைக்கும். தங்க நகைக் கடன்களுக்கான செயல்பாட்டுக் கட்டணம் வெவ்வேறு அளவாக இருக்கிறது. பொதுவாக வங்கிகள் 2 சதவீதம் வரையில் வசூலிக்கின்றன. எனவே செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பதைப் பல்வேறு வங்கிகளில் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கலாம்.

Leave a Comment