நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள்-விவரம்..!! - Tamil Crowd (Health Care)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள்-விவரம்..!!

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள்-விவரம்..!!

மாநில தேர்தல் ஆணையம் தெரிவிப்பு:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 % வாக்குகள் பதிவாகியுள்ளன என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை:

மொத்தமாக 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 60.70 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது:

“தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 % வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் குறிப்பாக 

  • மாநகராட்சிகளில் 52.22 % வாக்குகளும்,
  •  நகராட்சிகளில் 68.22 % வாக்குகளும்,
  •  பேரூராட்சிகளில் 74.68 % வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 அதிகபட்சமாக தருமபுரியில் 80.49 % வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 % வாக்குகள் பதிவாகியுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment