தேசிய பாதுகாப்பு அகாடமியில் இனி பெண்களும் சேர்க்கப்படுவர்: மத்திய அரசு தெரிவிப்பு..!!

 தேசிய பாதுகாப்பு அகாடமியில் இனி பெண்களும் சேர்க்கப்படுவர்: மத்திய அரசு தெரிவிப்பு..!!

தேசிய பாதுகாப்பு அகாடமியில் இனி பெண்களும் சேர்க்கப்படுவார்கள் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குஷ் கல்ரா மனுத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க.. 

ஆசிரியர் இடமாறுதல் முறைகேடு;உள்துறைச் செயலர், பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு..!!

அதே நேரத்தில் இந்த ஆண்டு நடைபெறும் தேர்வில் பெண்களை அனுமதிப்பது சற்று சிரமமான காரியம் என்றும் இது தொடர்பான புதிய விதிமுறைகளை உருவாக்க தங்களுக்கு சிலகாலம் தேவைப்படுவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Leave a Comment