தேசிய அளவில் சிறந்த பள்ளிக்கான விருது தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு.!! - Tamil Crowd (Health Care)

தேசிய அளவில் சிறந்த பள்ளிக்கான விருது தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு.!!

 தேசிய அளவில் சிறந்த பள்ளிக்கான விருது தமிழகத்தின்

 கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு.!!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மூன்றாவது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிகள் பிரிவில் முதல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த கிராம பஞ்சாயத்து பிரிவில் இரண்டாம் பரிசு செங்கல்பட்டு மாவட்டம் புதூர் ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. மதுரை மாநகராட்சிக்கு சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புப் பிரிவில் மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நீர் மேலாண்மையில் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ள உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு விருதினை வழங்கினார்.

அதேபோல் தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா 3ஆம் இடத்தை பிடித்த தமிழகத்திற்கான விருதை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடமிருந்து பெற்றார். 

Leave a Comment