தேசிய அளவில் ஒரு திட்டம்: ஜூலை 31க்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்- உச்ச நீதிமன்றம் அதிரடி ..!! - Tamil Crowd (Health Care)

தேசிய அளவில் ஒரு திட்டம்: ஜூலை 31க்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்- உச்ச நீதிமன்றம் அதிரடி ..!!

தேசிய அளவில் ஒரு திட்டம் : ஜூலை 31க்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்- உச்ச நீதிமன்றம் அதிரடி ..!!

நாடு முழுவதும் ஜூலை 31க்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தாமாக வழக்கு பதிந்து விசாரித்த வந்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க… 

 வங்கி சேமிப்பு கணக்கு: தொடங்கும் போது -அறிந்து கொள்ள வேண்டியவை..!! 

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பிரச்சனையின் காரணமாக பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரியும், அடிப்படை வசதிகள் கேட்டும் பல்வேறு பகுதகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் தனிமனித இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மீறப்பட்டன. 

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பல்வேறு மாநிலங்களில் அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்தது. இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் ஒரு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம், அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்டு தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,’ அங்கீகரிக்கப்படாத தொழிலாளர்களை பதிவு செய்யும் விதமாக அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் தேசிய அளவில் ஒரு திட்டம் உருவாக்கப்பட்ட வேண்டும். 

அது இணையத்தின் வழியாகவும் செயல்படும் விதமாக இருக்க வேண்டும். அதேப்போன்று முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் தொடர்பான முழு தகவல்களையும் சேகரித்து அதில் பதிவு செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான உணவுகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும். வரும் ஜூலை 31ம் தேதிக்குள் நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்கள் அதனை அமல்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் உணவு தானியங்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அதற்கான திட்டங்களை மாநில அரசுகள் தொடங்க வேண்டும். மேலும் கொரோனா பிரச்னை முடியும் வரை உணவு தானியங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து செயல்பட வேண்டும். 

இந்த செய்தியையும் படிங்க… 

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி(2021)க்கு- தகுதி பெற்றுள்ள தமிழக வீரர்கள்..!!

குறிப்பாக மாநில அரசுகளுக்கு தேவையான உணவு தானியங்களை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இருப்பினும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான நிதியை நேரடியாக அவர்களுக்கு வழங்குவதா? அல்லது நலத் திட்டங்கள் வாயிலாக வழங்குவதா? என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என உத்தரவிட்டனர்.

Leave a Comment