தூக்கமின்மை(INSOMNIA) க்கும், மனநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டா..??(Sleeplessness & Mental illness)

 தூக்கமின்மைக்கும், மனநோய்க்கும் நெருங்கிய தொடர்பு

 உண்டா..??

தூக்கமின்மை(Insomnia):

தூக்கமின்மை(Insomnia) காரணமாக உடல் சூடு போன்ற உடல் கோளாறுகள் ஏற்பட்டாலும் கூட , அதிக நாட்கள் அல்லது  ஒரு நாளில் அதிக நேரம் தூக்கமின்றி இருந்தால் அது மனநோய்க்கு வித்திடும். பொதுவாக மனித உடலுக்கு தினமும் 8 மணி நேர தூக்கம் அவசியம். அது அதிகரித்தாலோ, அல்லது போதிய அளவு தூக்கமின்மையாலோ மூளை சோர்வு (Depression)ஏற்படுகிறது.

தூக்கமின்மைக்கும், மனவியாதிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதென உளவியல் கூறுகிறது. பொதுவாக மனநோய்(Mental disorder) உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகினால் முதலில் அவர்களுக்கு அளிப்பது நிம்மதியான உறக்கத்தை கொடுக்கக்கூடிய மாத்திரை, மருந்துகளே.

மனநோய் துவக்க நிலையில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் நன்றாக போதிய அளவு தூங்கினாலே அவர்களுக்கு 90% நோய் குணமாகிவிடும்.  மனநோய்(Mental illness) என்பது பல்வேறு நிலைகளில், அதன் தீவிரத்தைப் பொருத்து மாறுபடுகிறது.

மனநோயின் அறிகுறிகள்:

மன அழுத்தமானது வெவ்வேறு நிலைகளில் காணப்படுவதுடன் அறிகுறிகளும் வேறுபடும். இந்த அறிகுறிகள் மனிதருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவிற்கேற்ப வேறுபடும்.இதனால் உடல் நலம் பாதிப்படைவதுடன் மனச்சோர்வும் உண்டாகிறது.

 1. உணர்வு தொடர்பானவை
 2. உடற்சூழலியலில் இடர்கள்
 3. பழக்கவழக்கம் தொடர்பானவை

உணர்வு தொடர்பானவை:

அதிக கவலை, மனக்குழப்பம், மனப்போராட்டம், எளிதில் எரிச்சலுறல் , கோபமுறுதல், மனதை ஓய்வாக வைத்தக்கொள்ள முடியாமல் உணர்தல், தனிமையாக உணர்தல், மனச்சோர்வு(Depression)

உடற்சூழலியலில் இடர்கள்:

தலைவலி, நெஞ்சு வலி, வயிற்றுப்போக்கு (Diarrhea), மலச்சிக்கல் (Constipation), குமட்டல் (Nausea), தலைச்சுற்றல்  (Dizziness), அதிகமான இதயத்துடிப்பு.

பழக்கவழக்கம் தொடர்பானவை:

மிக அதிகமாகவோ, மிக குறைவாகவோ உணவு உட்கொள்ளல், அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை (Insomnia), சமூகத்திலிருந்து ஒதுங்கி இருத்தல், வேலைகளைத் தள்ளிப்போடல், பொறுப்புகளில் இருந்து ஒதுங்குதல், அதிகரிக்கும் மதுபானம், போதைப்பொருள், புகைத்தல் போன்றவற்றுடன் நகம் கடித்தல் போன்ற ஒழுங்கற்ற பழக்கங்கள் அதிகரிக்கும்.

மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு:(Depression)

 • மனக்கவலை
 • மிகுந்த சோர்வு
 • பசியின்மை
 • எடை குறைவு(Weight loss)
 • அதிகாலை தூக்கமின்மை
 • தன்னம்பிக்கையின்மை
 • எதிலும் ஆர்வமின்மை( No interest)
 • அடிக்கடி அழுதல்
 • அதிகமான குற்ற உணர்வு
 • அடிக்கடி தற்கொலை எண்ணங்கள்

மனச்சிதைவு நோய்:  (Schizophrenia)

 • தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்
 • தொடர் தூக்கமின்னை
 • காதில் மாயக்குரல் கேட்டல்
 • அதிகமாக சந்தேகப்படுதல்
 • அனைவரும்தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு
 • சுற்றத்தார்கள்-அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான எண்ணம்
 • உடல் தூய்மை படிப்படியாகக் குறைதல்

மனப்பதட்ட நோய்:(Anxiety Disorder)

 • நெஞ்சுப் படபடப்பு
 • கை நடுக்கம்
 • அதிகமாக வியர்த்தல்
 • நெஞ்சுவலி
 • எதிலும் கவனம் செலுத்த இயலாமை
 • தூக்கக் குறைவு
 • எதிர்மறையான எண்ணங்கள்(Negative Thinking)
 • அடிக்கடி எரிச்சல் அடைதல்

பயம் நோய்:(Phobia)

 • தனிமையில் இருக்க பயம்
 • கூட்டத்தினை கண்டு பயம்
 • புதிய நபர்களை எதிர்கொள்ள பயம்
 • எண்ணம் மற்றும் செயல் சுழற்சி பயம்
 • திரும்ப திரும்ப ஒரே எண்ணங்கள் மனதிற்குள் வந்து தொல்லை தருவதும் அவை தேவையற்றது என தெரிந்து தவிர்க்க முற்பட்டும் , தவிர்க்க முடியாத நிலை.
 • ஒரு நாளின் பெரும் பகுதி இந்த எண்ணங்களோடு போராடுவதிலேயே செலவாகிவிடுவது.
 • திரும்ப திரும்ப ஒரே செயலைச் செய்து கொண்டு இருப்பது.
 • ஒரு செயலை திரும்ப திரும்ப பல முறை செய்தால் மட்டுமே திருப்தி அடைதல்
 • தவிர்க்க முற்படும் பொழுது திருப்தியின்மையும், மனப்பதற்றமும் உண்டாவது

ஆளுமை கோளாறுகள்:(Personality Disorders)

 • அடிக்கடி கோபம் கொள்ளுதல்
 • குறுகிய கால குணமாறாட்ட அறிகுறிகள்
 • மற்றவர்களுடன் உள்ள உறவுகளை அடிக்கடி முறித்துக் கொள்ளுதல்
 • உடல் உறுப்புகளைத் தானே காயப்படுத்திக் கொள்ளல்
 • கலவரங்களில் ஈடுபடுதல்
 • சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுதல்
 • மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனித்து ஒதுங்கி வாழ்தல்
 • பெற்றோர்களுக்கு கீழ்ப்படியாமை
 • எப்பொழுதும் சோர்வாகவும் மந்தமாகவும் இருத்தல்
 • எப்பொழுதும் பதற்றமாக இருத்தல்

பெண்களுக்கு ஏற்படும் மனநோய்:

 • அதிக எரிச்சல்
 • கோபம்
 • சோர்வு
 • பதற்றம்
இவை அனைத்தும் மாதவிடாய் முடிந்ததும் சரியாகிவிடும்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மனநோய்:

 • குழந்தைகளுக்கு பாலூட்டாமை
 • அடிக்கடி அழுதல்
 • தூக்கமின்மை(Insomnia)
 • பசியின்மை
 • தற்கொலை எண்ணங்கள்
 • தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்துக்கொள்ளுதல்

முதியோர்களை பாதிக்கும் மனநோய்கள்:

 • தொடர் தூக்கமின்மை
 • மறதி
 • பொருட்களை வைத்த இடத்தை மறத்தல்
 • உறவினர், நண்பர்களை மறத்தல்
 • அடிக்கடி எரிச்சல்,கோபம் கொள்வது
 • பசியின்மை

இதர மன நோய்கள்:

 • சாமியாட்டம்
 • புகை பிடித்தல்
 • மது அருந்துதல்
 • கணவன்-மனைவி பிரச்சனைகள்
 • மனரீதியான பாலியல் பிரச்சனைகள்

குழந்தைகளை பாதிக்கும் மனநோய்கள்:

 • குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல்
 • படிப்பில் கவனம் குறைதல்
 • அதிக கோபம் கொள்ளுதல்
 • அடிக்கடி எரிச்சல் அடைதல்
 • படுக்கையில் சிறுநீர் கழித்தல்
 • மிக மிக அதிக சுறுசுறுப்போடு , ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல்(ADHD)
 • கீழ்படியாமை
 • அடிக்கடி பொய்ச் சொல்வது
 • திருடுவது
 • குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்று போய் திரும்பவருதல்(Breath holding spell) 
 • நன்றாக படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது (Changes in academic performance)
தூக்கம் என்பது உடலுக்கு மிக இன்றியமையாதது. உடலுக்கும், மனதிற்கும் முழுமையான ஓய்வை அளிக்கும் உன்னதமான ஒரு விஷயம்
தான் தூக்கம்.

Leave a Comment