திருட்டு ஒமைக்ரான் (stealth Omicron) BA.2 - டெல்டாவை விஞ்சும் வீரியம்-சவாலாக அமையும்..!! - Tamil Crowd (Health Care)

திருட்டு ஒமைக்ரான் (stealth Omicron) BA.2 – டெல்டாவை விஞ்சும் வீரியம்-சவாலாக அமையும்..!!

 திருட்டு ஒமைக்ரான் (stealth Omicron) BA.2 – டெல்டாவை விஞ்சும்


 வீரியம்-சவாலாக அமையும்..!!

உருமாறிய கொரோனா:

டெல்டா கொரோனாவிற்கு அடுத்தப்படியாக ஒமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா உலகம் முழுவதும் பரவியுள்ளது.

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பரவி உள்ளது.  தென்னாப்பிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இந்த நாடுகளில் பெரும்பாலோனோர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட போதிலும் ஒமைக்ரான் தாக்கியது. ஆனால் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியாவில் மூன்றாம் அலை ஒமைக்ரான் உருவாகியது. ஆனால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஒமைக்ரானின் மற்றொரு திரிபான BA.2 கொரோனா:

ஒமைக்ரான் பரவியபோதே அதன் தன்மையின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருவதற்கான அறிகுறி என ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். இருந்தாலும் கொரோனாவின் அச்சுறுத்தல் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அதற்கு காரணம் ஒமைக்ரானின் மற்றொரு திரிபான BA.2 கொரோனா. ஒமைக்ரானிலிருந்து உருமாறி இந்த வகை கொரோனா (Sub Variant) உருவாகியுள்ளது. இதற்கு திருட்டு ஒமைக்ரான் (stealth Omicron) எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டெல்டாவை விட வீரியம் அதிகம்:

பொதுவாக டெல்டாவுக்கும் ஒமைக்ரானுக்கும் S ஜீன் மூலமே வேறுபாடு கண்டறியப்படும். ஆனால் இந்த திருட்டு ஒமைக்ரானை பொறுத்தவரை சாதாரண கொரோனாவில் காணப்படும் அதே எஸ் ஜீன்( S ஜீன்)  இதிலும் இருக்கிறது. ஆர்டிபிசிஆர்(RTPCR) பரிசோதனையில் கூட ஒமைக்ரானை கண்டறிய முடிவதில்லை. இதுதொடர்பாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து முடிவை வெளியிட்டுள்ளனர்.  இந்த  BA.2 வைரஸ் மிக வேகமாகப் பரவக் கூடியது எனவும் டெல்டாவை விட வீரியம் அதிகம் எனவும் கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.

தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது:

இதுவரை வந்ததிலேயே டெல்டா கொரோனா தான் அபாயகரமானது. ஆனால் அதை விட இந்த உருமாற்ற வைரஸ் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது .நுரையீரலை கடுமையாகப் பாதித்து அதிக உயிரிழப்பை ஏற்படுத்தவல்லது என்றும் அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளனர். குறிப்பாக தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தி முதலியவைகளை மீறியும் மனிதர்களை தாக்கும் என ஆய்வு முடிவு சொல்கிறது.

Leave a Comment