தளர்வுகளற்ற 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை இல்லை.! - அமைச்சர் விளக்கம்..!! - Tamil Crowd (Health Care)

தளர்வுகளற்ற 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை இல்லை.! – அமைச்சர் விளக்கம்..!!

தளர்வுகளற்ற 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை இல்லை.! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!!

தமிழகத்தில் Plus One வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தற்போது கிடையாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் Corona தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் 10th வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது 1Plus One வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளர்வுகளற்ற Lockdown அமலில் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த செய்தியையும் படிங்க…

“முழு ஊரடங்கிற்கு (FULL LOCKDOWN) முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்- மக்கள் நடந்து கொள்ள வேண்டும்”:முதலமைச்சர்

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் ‘தமிழ்நாட்டில் Plus One வகுப்பு மாணவர் சேர்கை தொடங்கி உள்ளது. Corona காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment