தலைமுடி சார்ந்த பிரச்சினைகளை போக்க – ஆரஞ்சு தோல்..!!

 தலைமுடி சார்ந்த பிரச்சினைகளை போக்க – ஆரஞ்சு தோல்..!!

ஆரஞ்சு பழம் இயற்கையாகவே உடலுக்கு பலவகையான நன்மைகளைக் கொண்டுள்ளது.

ஆரஞ்சு பழத்தில் Protein, நார்ச்சத்துக்கள், Vitamin C, போலெட்ஸ், தையாமின், Potassium, Vitamin A, Calcium, Vitamin B6, Magnesium போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இந்த செய்தியும் படிங்க…

உடல் வெப்பத்தைத் தணிக்கும் -உணவுகள்..!! 

இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி தலைமுடி சார்ந்த பிரச்சினைகளையும் போக்க உதவுகின்றது.

அதிலும் ஆரஞ்சு தோல் ஹேர் மாஸ்க் முடி உதிர்தலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். அந்தவகையில் தற்போது இதனை எப்படி முடிக்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

ஆரஞ்சு தோலில் 1 கப் தயிர் கலந்து அடர்ந்த பேஸ்ட் ஆக தயாரிக்கவும். இதை முடி , உச்சந்தலையில் தடவி எடுக்கவும். இதை விரல் நுனியில் மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் கழித்து மந்தமான நீர் கலந்து கண்டிஷனருடன் அலசி எடுக்கவும். இதை வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தவும். இது முடி உதிர்தலையும் தடுக்க செய்கிறது.

ஆரஞ்சு தோல் பவுடரை ஆலிவ் எண்ணெயுடன் நன்றாக சேரும் வரை கலந்து எடுக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி எடுக்கவும். சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து இலேசான ஷாம்பு மற்றும் மந்தமான தண்ணீரில் அலசி எடுக்கவும். வாரத்தில் இரண்டு நாட்களுக்கு இதை செய்து வரவும். இது உச்சந்தலையின் துளைகளிலிருந்து அசுத்தங்களை நீக்க செய்கிறது.

ஆரஞ்சு தோல் பவுடரை தேனில் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் அமைக்கவும். இதை கூந்தலில் மயிர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி எடுக்கவும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் அலசி எடுக்கவும். இது முடி அமைப்பை மேம்படுத்த மயிர்க்கால்களுக்கு வலுவை அளிக்கிறது.

இந்த செய்தியும் படிங்க…

 ஜலதோஷம், இருமலை நீக்க – மூலிகை டீ தயாரிப்பது எப்படி..??  

2 டீஸ்பூன் ஆரஞ்சு தோலுடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து உச்சந்தலையில் நன்றாக தேய்க்கவும். மயிர்க்கால்களில் இந்த பேஸ்ட் முழுவதுமாக இருக்கட்டும். 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி எடுக்கவும். இது மென்மையான பளபளப்பான முடியை அளிக்க கூடும்.

Leave a Comment