தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் B.Ed., M.Ed., மாணவா் சேர்க்கை தொடக்கம்- துணைவேந்தா்..!!
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் B.Ed., மற்றும் M.Ed., மாணவா் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (B.Ed.,) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞா் (M.Ed.,) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்புக்கு 2021 – 22 ஆம் கல்வியாண்டுக்கான நேரடிச் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
மாணவிகளுக்குத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் முதல் விண்ணப்பத்தை வழங்கி தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வளா்தமிழ்ப் புலத் தலைவா் கு. சின்னப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியையும் படிங்க…
SBI : 6100 காலிப் பணியிடங்கள்;ரூ.15,000/-.சம்பளம்.!!
சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் August 6 ஆம் தேதி வரை நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04362 – 226720, 227089 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் எனவும் பதிவாளா் (பொறுப்பு) இரா. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.