தமிழ்நாட்டில் JUNE 21 :ஊரடங்கு & தளர்வுகள் -அடுத்த அறிவிப்புகள் என்னென்ன..?? - Tamil Crowd (Health Care)

தமிழ்நாட்டில் JUNE 21 :ஊரடங்கு & தளர்வுகள் -அடுத்த அறிவிப்புகள் என்னென்ன..??

தமிழ்நாட்டில் JUNE 21 :ஊரடங்கு & தளர்வுகள் -அடுத்த அறிவிப்புகள் என்னென்ன..??

தமிழ்நாட்டில் JUNE 21 முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் Full Lockdown பிறகு Corona பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று அதிகம் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இந்த செய்தியும் படிங்க…

 பெற்றோரை இழந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் – ஸ்டாலின்..!!   

கடந்த அறிவிப்பில் டீக்கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் வரும் அறிவிப்பில் நகைக் கடைகள், துணிக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் ஆனால் பெரிய கடைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்டோ, டாக்சிகள் இயங்கினாலும், பணியிடங்களுக்கு சென்று வர பேருந்து சேவை இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்துவருகின்றனர். அதனால் நகரப்பேருந்துகள் 27 மாவட்டங்களில் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதால் குற்றாலம், திற்பரப்பு அருவி, தேனி, கோவை மாவட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment