தமிழ்நாட்டில் கரோனா 3ஆம் அலையைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள்- முதல்வர் அறிவிப்பு..!!

 தமிழ்நாட்டில் கரோனா 3ஆம் அலையைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள்-  முதல்வர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு பாதிப்புக்கேற்ப தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த செய்தியின் படிங்க… 

திமுக வாக்குறுதி: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது..? – அமைச்சர் விளக்கம்..!!

இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா 3ஆம் அலையைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கரோனா தடுப்பு பணிகளுக்காக மட்டும் இதுவரை 353 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ள தொகையிலிருந்து 100 கோடியைக் கரோனா மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Leave a Comment