தமிழ்நாட்டின் புதிய DGP யார்..??
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை நியமிப்பது தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.
இந்த செய்தியையும் படிங்க…
Delta Plus அதிக அளவில் பரவக்கூடியது : WHO( டெட்ரோஸ் அதானோம்) எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் ஏ.கே.திரிபாதியின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த டிஜிபி யார் என்கிற விவாதம் காவல் துறை வட்டாரங்களில் பலமாக எழுந்துள்ளது. பணிமூப்பு அடிப்படையில் டிஜிபி பதவிக்கு தகுதிவாந்த அதிகாரிகளின் பெயரை யுபிஎஸ்இக்கு மாநில அரசு பரிந்துரைக்கும்.
அதில் 3 பேரை தேர்ந்தெடுத்து யுபிஎஸ்இ திரும்ப அனுப்பும். இவர்களில் ஒருவரைத் தமிழ்நாடு அரசு தேர்வு செய்து உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பும். இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கினால், அவர் அடுத்த டிஜிபியாக தேர்வு செய்யப்படுவார். சைலேந்திர பாபு, கரண் சின்கா, சஞ்சய் அரோரா, சுனில் குமார் சிங், கந்தசாமி ஆகியோர் அடுத்த டிஜிபிக்கான ரேஸில் உள்ளனர்.
இந்த நிலையில் டிஜிபி நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், தற்போதைய டி.ஜி.பி திரிபாதி ஆகியோர் டெல்லி ஷாஜகான் சாலையில் உள்ள யுபிஎஸ்சி தலைமையகத்துக்கு இன்று மதியம் சென்றனர். அங்கு புதிய டிஜிபியை இறுதி செய்வதற்காக 2 மணி நேரம் வரை ஆலோசனை நடைபெற்றது.
இந்த செய்தியையும் படிங்க…
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி(2021)க்கு- தகுதி பெற்றுள்ள தமிழக வீரர்கள்..!!
இதன்பிறகு தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி திரிபாதி ஆகியோர் பொதிகை தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு வந்தனர். இன்று மாலை அவர்கள் டெல்லியிலிருந்து சென்னை திரும்புகின்றனர். விரைவில் தமிழ்நாட்டிற்கான டிஜிபி யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.