தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை “தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.
கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், குடிசை மாற்று வாரியம் இனி ” தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ” என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி முதல் இதற்கு தடை -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இனி வரும் காலங்களில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என்றும் இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை “தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.