தமிழ்நாடு அரசுக்கு முக்கிய கோரிக்கை – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி..!!

தமிழ்நாடு அரசுக்கு முக்கிய கோரிக்கை – தமிழ்நாடு

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி..!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்தவும் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று தமிழகத்தில் 1-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே நடத்த திட்டமிடபட்டிருந்த திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. இந்த வருடம் மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சீர்காழியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழ்நாடு அரசுக்கு ஒரு முக்கிய கோரிக்கை  வைத்தனர். அந்த கோரிக்கை என்னவென்றால், 

  • கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருப்பதால் மாணவர்களின் நலன்கருதி பிரதி சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும்.
  •  ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கி வரும் உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் மாற்றுப்பணியில் தேவைக்கு அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரிய ஆணை வழங்க வேண்டும். 
  •  ஆசிரியர்களுக்கு அந்தந்த வட்டாரத்தில் முகாம் நடத்தி உடனுக்குடன் ஆணை வழங்க மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து உள்ளனர்.  
  • தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல் முறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர்.

Leave a Comment