தமிழக பள்ளிகளில் LKG வகுப்புகள் மூடல்..?? - பள்ளிக்கல்வித்துறை..!! - Tamil Crowd (Health Care)

தமிழக பள்ளிகளில் LKG வகுப்புகள் மூடல்..?? – பள்ளிக்கல்வித்துறை..!!

 தமிழக பள்ளிகளில் LKG வகுப்புகள் மூடல்..?? –


 பள்ளிக்கல்வித்துறை..!!

தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள எல்கேஜி (LKG) வகுப்புகளை மூட கல்வித்துறை முடிவு. 

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக 2- ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின் 3-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்பு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று  LKG,UKG வகுப்புகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள், அங்கன்வாடி, பால்வாடி உள்ளிட்ட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வகுப்புகள் கடந்த பிப்ரவரி  16 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்த வகுப்புகள் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள எல்கேஜி (LKG) வகுப்புகளை மூட கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசுப் பள்ளிகளில்  LKG  குழந்தைகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் 1-ஆம் வகுப்புக்கு மேல் உள்ள வகுப்புகளுக்குப் மாற்றப்படுகின்றனர். நடப்பு கல்வியாண்டு முடிந்ததும் LKG  வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் மூடிவிட்டு, சமூக நலத்துறையின் அங்கன்வாடிகளில் மீண்டும் LKG  வகுப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment