தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு-சபாநாயகர் அப்பாவு..!!

 தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு-சபாநாயகர் அப்பாவு..!!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வரின் பதிலுரையை அடுத்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த செய்தியையும் படிங்க…   

 கோவிட்  இணையதளத்தில் முன்பதிவு செய்வதில்-சில தளர்வுகள்:மத்திய அரசு அறிவிப்பு..!! 

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21 அன்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. அவர், தனது உரையில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

இந்த விவாதங்களில், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (ஜூன் 24), ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றினார்.

இந்த செய்தியையும் படிங்க…   

பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்..??அமைச்சர்  விளக்கம்..!!

இதையடுத்து, சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.

Leave a Comment