தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்
அமல்படுத்தப்படுமா..??
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சமீபத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினார்..
இதையடுத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அந்த கடிதத்தில் 1968 முதல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசால் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த மாத ஓய்வூதிய தொகை 20 ஆயிரம் என தொடங்கப்பட்டது. இருப்பினும் அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஓய்வு தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 – 2004 முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. அதனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.