தமிழகம் முழுவதும் பேருந்துகளில்-இலவச பயணம்..!!

 தமிழகம் முழுவதும் பேருந்துகளில்-இலவச பயணம்..!!

தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உறவினர்கள் ஆகியோருக்கான டிக்கெட் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியும் படிங்க…

SSY(செல்வமகள் சேமிப்பு திட்டம்): கணக்கு  தொடங்குவது எப்படி.? என்னென்ன பயன்கள்..?? 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் சார்ந்த பல்வேறு நடத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் முதல்வராக பொறுப்பேற்றதும் முதலில் இட்ட 5 கையொப்பங்களில் மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்பதும் அடங்கும்.

இரண்டு நாட்கள் பெண்கள் இலவசமாக நகரப்பேருந்துகளில் பயணித்தனர். ஆனால் மே 10 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனிடையே பெண்களுக்கான இலவச பயணத் திட்டத்தை தங்களுக்கும் வழங்க வேண்டும் என திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி உடன் இருக்கும் ஒருவர் என இந்த நான்கு பிரிவினருக்கும் நகரப்பேருந்துகளில் இலவசம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்ட நிலையில் அவர்களுக்கான டிக்கெட் அச்சிடப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் மாவட்டங்களுக்குள் பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியும் படிங்க…

 புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலனை-அரசு ஊழியர்கள் நம்பிக்கை..!!  

இந்நிலையில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளியுடன் உதவிக்கு ஒருவர், மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணிக்க கட்டணமில்லா பயணச்சீட்டு அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment