தமிழகம் முழுவதும் திங்கள் கிழமை (ஜூலை 5) முதல் செயல்பட அனுமதி..!! - Tamil Crowd (Health Care)

தமிழகம் முழுவதும் திங்கள் கிழமை (ஜூலை 5) முதல் செயல்பட அனுமதி..!!

 தமிழகம் முழுவதும்  திங்கள் கிழமை (ஜூலை 5) முதல் செயல்பட அனுமதி..!!

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொதுமுடக்கம் திங்கள் கிழமை (ஜூலை 5) காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 

  • இதையடுத்து தமிழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை தொடர்புடைய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 இந்த செய்தியையும் படிங்க…

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொதுமுடக்கம்  திங்கள்கிழமை (ஜூலை 5) காலை 6 மணியுடன் நிறைவடைவதை அடுத்து ஜூலை 2-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், தமிழக்ததில் நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதை அடுத்து, ஜூலை 5-ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகளை அறிவித்தார்.

இதையடுத்து, அரசு அறிவித்த தளர்வுகளின்படி, 

  • பொதுப்போக்குவரத்து,
  •  கோவில்கள், 
  • கல்லூரிகள் 

ஆகியவை தமிழகம் முழுவதும்  திங்கள்கிழமை (ஜூலை 5) முதல் செயல்படுகின்றன.

  • இதையடுத்து எஸ்.ஆர்.எஃப்(SRF), ஜே.ஆர்.எஃப்(JRF), எம்.பில்(M.Phil.,)., பி.எச்.டி(Ph.D.,)., ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை தொடர்புடைய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • இவர்களின் கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற மாணவர்களுக்கு கல்லூரி, பல்கலைக் கழகங்கள் வர அனுமதி வழங்கப்படவில்லை.

Leave a Comment