தமிழகத்தில் Work From Home பணியாளர்கள் கவனத்திற்கு..!!

 தமிழகத்தில் Work From Home பணியாளர்கள் கவனத்திற்கு..!!

தமிழகத்தில் CORONA Virus அச்சம் காரணமாக Work From Home முறையை பல்வேறு நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றனர். அதன் மூலம் பணியாளர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறித்து தமிழக அரசிற்கு தெரிவிக்க புகார் எண் ஒன்றை அரசு அறிவித்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 பள்ளிகள் திறப்பு எப்போது..?? – அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்..!! 

Work From Home முறை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் corona நோய்த்தொற்று பரவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பணியாளர்கள் தங்களது அலுவலகம் சென்று பணி புரிந்த நிலை தற்போது மாறிWork From Home முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு நன்மைகள் மற்றும் தீமைகள் இருந்து வருகிறது. அதன்படி Corona பரவல் காரணம் காட்டி சில ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை.

மேலும் சில ஊழியர்களுக்கு 8 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. தற்போது இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

 இது குறித்து தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் தெரிவித்ததாவது, Work From Home பணியாளர்களை 8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிய கூறி வலியுறுத்தினால் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியையும் படிங்க…

 8 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 20 IAS அதிகாரிகள் மாற்றம்:  தலைமை செயலர் இறையன்பு ..!! 

இது தொடர்பான புகார்கள் 1098 என்ற இலவச எண் மூலம் தமிழக அரசிற்கு தெரிவிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அல்லது தனி நபர் மீது மாவட்ட உதவி தொழிலாளர் நல ஆணையம் மூலம் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர்களுக்கு 6 மாதம் முதல் 2 வருட சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment