தமிழகத்தில் 7 வாக்குச்சாவடியில் 21-02-2022 மறுவாக்கு பதிவு-மாநிலத் தேர்தல் ஆணையம்..!!

 தமிழகத்தில் 7 வாக்குச்சாவடியில் 21-02-2022 மறுவாக்கு பதிவு-


மாநிலத் தேர்தல் ஆணையம்..!!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை திங்கட்கிழமை(21-02-2022) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதவிகளுக்கு தேர்தல் சனிக்கிழமை(19-02-2022) நடைபெற்றது. தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக, தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (22-02-2022) நடைபெற்று உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 

சென்னை மாநகராட்சி திருமங்கலம், ஜெயங்கொண்டம் 

திருவண்ணாமலை நகராட்சிகளில் ஐந்து வார்டுகளில் உள்ள ஏழு வாக்குச்சாவடியில்

நாளை திங்கட்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment