தமிழகத்தில்: 10 ஆயிரம் தனியார் பள்ளிகளையும், 50 லட்சம் மாணவர்களையும் – அரசே எடுத்துக் கொள்ள கோரிக்கை..!!

 தமிழகத்தில்:  10 ஆயிரம் தனியார் பள்ளிகளையும், 50 லட்சம் மாணவர்களையும் – அரசே எடுத்துக் கொள்ள கோரிக்கை..!!

தமிழகத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக 10 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க….

BREAKING: PLUS TWO வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை: ஸ்டாலின் வெளியிட்டார்..!! 

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவியது. இதன் காரணமாக பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலை தற்போது வரை தொடருகிறது. பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வகுப்புகளே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிகளில் பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 10 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகளை மூடுவது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் வாங்கிய கடனை கட்ட முடியாததால் நர்சரி பிரைமரி பள்ளிகளை மூட முடிவு எடுத்துள்ளோம். எங்கள் பள்ளிகளையும் 50 லட்சம் மாணவர்களையும் அரசே எடுத்துக் கொள்ளட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க….

 BREAKING: யாருக்கெல்லாம் PLUS TWO மறு தேர்வு: அமைச்சர் விளக்கம்..!! 

இதன் மூலம் அந்த பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேரும் சூழல் நிலவுகிறது. இவரின் இந்த கூற்று மூலம் கொரோனா முடிந்து பள்ளிகள் திறந்தாலும் தனியார் பள்ளிகள் தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 thought on “தமிழகத்தில்: 10 ஆயிரம் தனியார் பள்ளிகளையும், 50 லட்சம் மாணவர்களையும் – அரசே எடுத்துக் கொள்ள கோரிக்கை..!!”

  1. கடன் வாங்கி பள்ளி கட்டி மக்களுக்கு நீங்கள் சேவை செய்து வருகிறீர்கள் அருமை

    Reply

Leave a Comment