தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை : அமைச்சர் உறுதி..!!

 தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை : அமைச்சர் உறுதி..!!

9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்ததாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோ தெரிவித்தார்.

 இந்த செய்தியையும் படிங்க…

ரிசர்வ் வங்கி: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது தங்கம்..!! 

 சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரி இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். ONLINE வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு முழுமையான அளவு பாடங்களை நடத்த முடியவில்லை என்று கூறினேன். 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் உறுதியளித்தார் என்று கூறினார்.

மேலும், TC இல்லாமல் எந்த வகையான பள்ளியிலும் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது என்றும் கட்டணம் செலுத்தாமல் படித்துவிட்டு வேறு பள்ளியில் சேரும் மாணவர்களால் நிர்வாகம் பாதிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அனைத்து மாநில அரசுகளும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. 

 இந்த செய்தியையும் படிங்க…

தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி:5 சவரன் நகை கடன் தள்ளுபடி – தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு..??

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் வரும் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துவிட்டார். இத்தகைய சூழலில் தமிழகத்திலும் விரைவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

Leave a Comment