தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து- முதல்வர் ஸ்டாலின் பதில்..!!

 தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து- முதல்வர் ஸ்டாலின் பதில்..!!

டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகள் வழங்கப்பட்டதை அடுத்து விரைவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. ஏற்கனவே ஆசிரியர் சங்கம் மற்றும் தனியார் பள்ளி உரிமையாளர்கள் அரசிடம் பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த செய்தியையும் படிங்க…

 PLUS TWO:  மதிப்பெண்ணில் திருப்தி இல்லையா..?? 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..!!

கரோனா 3-வது அலை பரவும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

”3-வது அலை வரக்கூடாது என்பது தான் அனைவரின் எண்ணமும். ஒருவேளை வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான திட்டங்களும், தமிழக அரசின் சார்பில் வகுக்கப்பட்டுள்ளது.  இப்போதுள்ள சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடியாத நிலை உள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைத்துத் தரப்பு கருத்தைக் கேட்டு முடிவெடுக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

Leave a Comment