தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி..!!

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி..!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த செய்தியையும் படிங்க….

BREAKING: யாருக்கெல்லாம் PLUS TWO மறு தேர்வு: அமைச்சர் விளக்கம்..!! 

கொரோனா பாதிப்பு முழுமையாகக் குறையும் வரை ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார்.

Leave a Comment