தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது..??-அமைச்சர்..!!

  தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது..??-அமைச்சர்..!!

 கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு பள்ளிகள் திறப்பது தான் சரியாக இருக்கும் என திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்தார். திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: பிளஸ் 2 மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது குறித்து தற்போது வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. PLUS TWO  மதிப்பெண்கள் விரைவில் வெளியிடப்படும். கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகிறது. கொரோனா 3வது அலை வரப்போவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அலை குழந்தைகளை தாக்கும் என்கின்றனர்.

இந்த செய்தியையும் படிங்க… 

அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்த பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு -உயர் நீதிமன்றம் உத்தரவு.!!  

ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகளை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் அறிவுறுத்தல்படி, மாணவர்களுக்கு கேடு விளைவிக்காத நாட்களாக தேர்வு செய்து பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா எப்போது கட்டுக்குள் வருகிறதோ அன்று பள்ளிகள் திறப்பது தான் சரியாக இருக்கும். கொரோனா குறைந்திருக்கிறது என்று சொன்னாலும், பெற்றோர்களுக்கு குழந்தைகளை வெளியே அனுப்ப பயம் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறக்கப்படும்.

Leave a Comment