தமிழகத்தில் காகிதமில்லா பட்ஜெட்: பேரவைத் தலைவர் அப்பாவு ஆலோசனை..!!

 தமிழகத்தில் காகிதமில்லா பட்ஜெட்: பேரவைத் தலைவர் அப்பாவு ஆலோசனை..!!

தமிழக சட்டப்பேரவையில் மின்னணு முறையில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பேரவைத் தலைவர் அப்பாவு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

 இந்த செய்தியையும் படிங்க…

 புதிய  9 மாவட்டங்கள்: உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயங்கும் திமுக, அதிமுக நிர்வாகிகள்..!!

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அப்பாவு பேசியதாவது,

தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை காகிதமில்லாத முறையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், காகிதமில்லாமல் மின்னணு முறையில் பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்து சட்டப்பேரவைக் குழு ஆலோசனை செய்து வருகிறது.

மேலும், மின்னணு முறையை பயன்படுத்துவது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக, கரோனா பரவல் காரணமாக நாடாளுமன்றத்தில் 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் காகிதமில்லாமல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 இந்த செய்தியையும் படிங்க…

 “இதையெல்லாம் செய்தாலே கொரோனா நம்மை அண்டாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!!

 

Leave a Comment