தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா..?? கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா..?? முதல்வர் இன்று ஆலோசனை..!!

 தமிழகத்தில்  ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா..?? கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா..?? முதல்வர் இன்று ஆலோசனை..!!

தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28-ந் தேதியுடன் முடிகிறது. தற்போது நோய்த்தொற்றின் தீவிரத் தன்மையை பொறுத்து மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியையும் படிங்க…

 ” உள்ளாட்சி தேர்தல் : அதற்கான தயாரிப்பு கூட்டம் நாளை நடைபெறும்” – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்..!! 

இந்நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா? கூடுதல் தளர்வுகளை அளிக்கலாமா உள்ளிட்டவை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாகவும், மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும் தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனையில் ஈடுப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த செய்தியையும் படிங்க…

 ஜூன் 30க்குள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால்-சம்பளம் கிடைக்காது..!!

தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

தொற்று பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில், மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு கடந்த வாரம் தளர்வுகள் அளிக்கப்பட்டன. 

  • சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் தற்போது நகரப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கொரோனா பரவல் குறைந்துள்ள மற்ற 23 மாவட்டங்களிலும் அனுமதிக்கலாமா என ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
  • கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருவதால், அங்கேயும் கூடுதல் தளர்வுகள் அளிப்பது பற்றி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படவுள்ளது.
  •  எனினும் இந்த மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படாது என கூறப்படுகிறது. 
  • தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் சிறிய ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளை திறக்க இம்முறை அனுமதி அளிக்கப்படாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • மருத்துவ வல்லுநர்கள் குழுவுடனான ஆலோசனையைத் தொடர்ந்து, தளர்வுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Leave a Comment