தமிழகத்தில் இன்று முழு பொதுமுடக்கம்: எவை இயங்கும், எவை இயங்காது..?? - Tamil Crowd (Health Care)

தமிழகத்தில் இன்று முழு பொதுமுடக்கம்: எவை இயங்கும், எவை இயங்காது..??

 தமிழகத்தில் இன்று முழு பொதுமுடக்கம்: எவை இயங்கும், எவை இயங்காது..??

தமிழகத்தில் இன்று முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், எவை எல்லாம் அனுமதிக்கப்படும், எவை எல்லாம் தடைவிதிக்கப்படும் என தெரிந்துகொள்வோம்.

இந்த செய்தியையும் படிங்க….

Diploma முடித்தவர்களுக்கு- NCRTC நிறுவனத்தில் வேலை..!! 

எவை எல்லாம் தடைவிதிக்கப்படும்:

  • தமிழகத்தில் இன்று காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்படும். 
  • இறைச்சி, மீன் கடைகளுக்கும் அனுமதி இல்லை. 
  • வணிக வளாகங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்படும். 
  • பேருந்துகள் உள்ளிட்ட அனைத்துவிதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. 
இந்த செய்தியையும் படிங்க…

எவை எல்லாம் அனுமதிக்கப்படும்:

  • அதேநேரத்தில் பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
  • விரைவு ரயில்களும், விமான சேவையும் திட்டமிட்டபடி இயங்கும். 
  • விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் மெட்ரோ ரயில் சேவை இயங்கும். 
  • எனினும் குறிப்பிட்ட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • முன்களப்பணியாளர்களுக்காக பேருந்துகளும், புறநகர் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
  • மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள் திறப்பதற்கும் அனுமதி உண்டு. 
  • ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள், சரக்கு வாகனங்கள், விவசாய விளைப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். 
  • உணவகங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 முதல் 3 மணி வரையிலும், மாலையில் 6 மணி முதல் 9 மணி வரையிலும் திறந்திருக்கலாம், எனினும் பார்சல் சேவை மட்டுமே வழங்க வேண்டும்.
  •  திருமண நிகழ்ச்சியில் 100 வரையிலும், துக்க நிகழ்ச்சியில் 50 பேர் வரையிலும் பங்கேற்கலாம். அதில் கலந்துகொள்வதற்கும் எவ்வித தடையும் இல்லை.

Leave a Comment