தமிழகத்தின் புதிய கவர்னருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்பு..!!
தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டள்ள ஆர். என். ரவிக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்!தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்!தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது! pic.twitter.com/CAhWbApeIo- M.K.Stalin (@mkstalin) September 9, 2021 மற்றொரு டுவிட்டில்,பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்!தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர்.இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது! pic.twitter.com/2wwvt00hVc- M.K.Stalin (@mkstalin) September 9, 2021
இந்த செய்தியையும் படிங்க….
அரசுப் பணிகளில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அளிக்க சட்டத்திருத்தம்: அமைச்சர்..!!
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி:
கேரளாவில் சிறந்த காவல்துறை தலைமை அதிகாரியாகவும், நாகலாந்து மாநில ஆளுநராகவும் சிறப்பாக பணியாற்றி தற்பொழுது தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள ஓய்வு பெற்ற IPS அதிகாரியான மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/UXdETeAg6q- Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 9, 2021மற்றொரு டுவிட்டில்,தமிழ்நாட்டின் ஆளுநராக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு சிறப்பான முறையில் பணியாற்றி, தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்க உள்ள மாண்புமிகு திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு என் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
pic.twitter.com/iY1U1nXdRn- Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 9, 2021
எதிர்க்கட்சி துணைத்தலைவர் பன்னீர்செல்வம்:
நாகா அமைதி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்த ஓய்வுபெற்ற IPS அதிகாரி ஆர்.என்.ரவியை புதிய கவர்னராக நியமிக்கப்பட்டதை அதிமுக சார்பில் வரவேற்கிறேன். அவரது நியமனம் நிச்சயமாக தமிழகத்தின் வளர்ச்சியை பெரிதும் உயர்த்தும். அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தனது திறமைகள், அறிவு மற்றும் ஆதரவை வழங்கிய பன்வாரிலால் புரோஹித்துக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதிமுகவுடனான அவரது நல்லுறவு மிகவும் பாராட்டத்தக்கது. பஞ்சாப்பின் கவர்னராக நியமிக்கப்பட்ட அவருக்கு வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
தமிழகத்தின் 15வது கவர்னராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான ரவீந்திர நாராயண ரவி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாமக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கேரளாவில் போலீஸ் அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதால், தமிழகத்தை பற்றி நன்கு அறிந்திருப்பார். தமிழக அரசின் நடவடிக்கைக்கு புதிய கவர்னர் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இந்த செய்தியையும் படிங்க….
தமிழக காங்., தலைவர் கேஎஸ் அழகிரி:
போலீஸ் பின்புலம் கொண்ட ரவியை தமிழக கவர்னராக நியமித்ததில் உள்நோக்கம் உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையில் ரவியை, மோடி அரசு கவர்னராக நியமித்து உள்ளது. தமிழக அரசியல் நடவடிக்கையை சீர்குலைக்க பா.ஜ.,வை வளர்த்தெடுக்க பகடைக்காயாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.