தமிழகத்தின் அடுத்த DGP – இறுதிப்பட்டியலில் 3 அதிகாரிகள்..!!

 தமிழகத்தின் அடுத்த DGP  – இறுதிப்பட்டியலில் 3 அதிகாரிகள்..!!

தமிழகத்தில் DGP யாக இருக்கும் ஜே.கே திரிபாதியின் பதவிக்காலம் வரும் 30-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் தமிழகத்தின் அடுத்த DGP  தேர்வு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழக DGP- யாக நியமனம் செய்ய 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மாநில அரசுக்கு பரிந்துறை செய்துள்ளது.

தமிழகத்தில் DGP -யாக பணியாற்றி வரும் ஜே.கே. திரிபாதியின் பதவிக்காலம் வரும் 30-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அடுத்த DGP-யை தேர்வு செய்யும் வகையில், தகுதியுள்ள அதிகாரிகள் பட்டியலை அனுப்புமாறு UPSC  தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த 1987 முதல் 1989 வரையிலான ஐபிஎஸ் பேட்சை சேர்ந்த 9 அதிகாரிகளின் பெயர்களை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புதிய DGP-யை தேர்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தலைமையில் டெல்லியில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

 தமிழக மாநில தலைமை செயலாளர் இறையன்பு 

உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும்

 தற்போதைய டிஜிபி திரிபாதி 

ஆகியோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், தமிழக அரசு பரிந்துரைத்த 9 பேர் கொண்ட பட்டியலில் இருந்து 

  1. சி சைலேந்திர பாபு, 
  2. கரண் சிங்கா (இருவரும் 1987 பேட்ச்) மற்றும் 
  3. சஞ்சய் அரோரா (1988 பேட்ச்) 

ஆகிய 3 IPS அதிகாரிகளின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்போது, இந்த மூன்று பெயர்களில் இருந்DGP-யை தேர்வு செய்வது தொடர்பாக பிரகாஷ் சிங் தொடர்ந்து வழக்கில், DGP பதவிக்கு தகுதியுள்ளவர்கள் பட்டியலில், கடந்த 2015-ம் ஆண்டு 5 அதிகாரிகளும், கடந்த 2019-ம் ஆண்டு முதல் பரிந்துரை பட்டியலில் 3 அதிகாரிகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபியை தேர்வு செய்ய திமுக அரசாங்கம், போலீஸ் பணியாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைக்கு பின் முடிவுக்கு வரும். ஏனெனில் இந்த மூவரும் தங்களது தனித்துவமான செயல்பாட்டு முறையில் தங்களை நிரூபித்துள்ளனர்.

Leave a Comment