தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!

 தனியார் பள்ளிகளில் RTE  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!!

RTE  மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம்:

 நீட்டிப்புRTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கை:

தனியார் பள்ளிகளில் இலவச & கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கல்வித்துறை.

தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2021-22 ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கு rte.tnschools.gov.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 1,07,992 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக நடப்புக் கல்வியாண்டில் LKG வகுப்பில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களிடம் ஆர்வம் குறைவாக உள்ளது.

 இதனால் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கு ஆகஸ்ட் 3ம் தேதி வரையில் 73 ஆயிரத்து 86 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.இதன் காரணமாக எஞ்சிய 43,000 இடங்களை நிரப்ப கூடுதலாக 10 நாட்கள் தேவை என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவுக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

 இந்த திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஆகஸ்ட் 13ம் தேதி வரை கால நீடிப்பு வழங்கி அரசு அறிவித்துள்ளது.

Leave a Comment