தனியார் கல்லூரி:கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை- அமைச்சர் எச்சரிக்கை..!!

 தனியார் கல்லூரி:கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை-  அமைச்சர் எச்சரிக்கை..!!

தனியார் கல்லூரிகளில் அதிகமாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க….

 மாதம் ரூ.1,87,700 வரை சம்பளத்தில்- தமிழக அரசு வேலை..!!  

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை இணையவழியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை தரமணியில் மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021 – 22ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, கொரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிப்பதை தவிர்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 18,120 இடங்களுக்கு மாணவர்கள் ஜூலை 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதேபோல்,PLUS ONE வகுப்பில் சேர்வதற்கு என்ன தகுதியோ, அதே தகுதிதான் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கும். CBSE மாணவர்களுக்கு அடுத்த மாதம் 31ஆம் தேதி தான் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட இருப்பதால் அதற்குப் பின்னர்தான் மாணவர் சேர்க்கை தொடங்கும்.

இந்த செய்தியையும் படிங்க….

10th Pass: மாதம் ரூ.63,200 வரை சம்பளம்- POST OFFICE JOB-2021..!!

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் கல்லூரிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Comment