தங்க நகைகளுக்குHALLMARK கட்டாயம்: மக்களிடம் இருக்கும் HALLMARK அல்லாத பழைய நகைகளை வாங்க அனுமதி..!!

 தங்க நகைகளுக்கு HALLMARK கட்டாயம்: மக்களிடம் இருக்கும் HALLMARK அல்லாத பழைய நகைகளை வாங்க அனுமதி..!!

தங்க நகைகளுக்கு இனி HALLMARK முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவு அமலுக்கு வந்திருக்கிறது. இதையடுத்து, மக்களிடம் இருக்கும் HALLMARK அல்லாத பழைய நகைகளை அப்படியே பெற்றுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

இந்த செய்தியும் படிங்க…

கொரோனா(CORONA)-வின் முக்கிய அறிகுறிகள் மாறிவிட்டது-பிரித்தானியா நிபுணர் எச்சரிக்கை..!! 

தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்காக BIS HALLMARK முத்திரை பதித்த தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், இதுவரைக்கும் 10 கிரேடுகளில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி 14 கேரட், 18 கேரட், 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கின்றன.

புதிய தங்க நகைகளுக்கு HALMARK முத்திரை கட்டாயமாக்கப்பட்டிருக்கும் அதே நேரம், மக்களிடம் இருக்கும் ஹால்மார் முத்திரை அல்லாத பழைய நகைகளை அப்படியே பெற்றுக்கொள்ளவும் நகை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஹால்மார்க் நகைகளுக்கு மாறுவதற்காக AUGUST மாதம் இறுதி வரைக்கும் அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதுவரைக்கும் அபராதம் விதிக்க கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இந்த செய்தியும் படிங்க…

 பெற்றோரை இழந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் – ஸ்டாலின்..!!  

இந்த புதிய உத்தரவினால் எழும் பிரச்சனைகள் குறித்து முடிவெடுக்க சிறப்பு கமிட்டி ஒன்றையும் அமைத்திருக்கிறது மத்திய அரசு.

Leave a Comment