தங்கம் விலை திடீர் சரிவு. இன்றைய விலை நிலவரம்..!!

 தங்கம் விலை திடீர் சரிவு. இன்றைய விலை நிலவரம்..!! 

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு பொதுமுடக்கக் காலத்தின் போது தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. அச்சமயம் தொழில்துறையில் நிலவிய தேக்கம் தங்கம் விலை உயர்வுக்கு வித்திட்டது. பின்னர், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தங்கம் விலை கணிசமாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் தொழில்துறையில் தேக்கம் நிலவுகிறது. இதனால், தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்திக்கிறது.

இந்த செய்தியும் படிங்க…

கொரோனா(CORONA)-வின் முக்கிய அறிகுறிகள் மாறிவிட்டது-பிரித்தானியா நிபுணர் எச்சரிக்கை..!!

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து ரூ.4,515க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.496 குறைந்து ரூ.36,120க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,100க்கும் விற்பனையாகிறது.

Leave a Comment