டெல்டா ரக அபாயம்; இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள்-ஜப்பான் பிரதமர் ..!!
பல்வேறு நாடுகளிலிருந்து அவர்கள் டோக்கியோவுக்கு கிளம்பும் முன்னரே அவர்களது நாட்டில் இரண்டு முறை வைரஸ் பரிசோதனை செய்து சான்றிதழை ஜப்பான் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.தற்போது இந்தியா உட்பட கிழக்காசிய நாடுகளில் டெல்டா ரக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. ஆகவே மற்ற நாட்டு ஒலிம்பிக் வீரர்களைக் காட்டிலும் இந்திய வீரர்களுக்கு அதிகளவு சோதனை மேற்கொள்ள ஜப்பான் அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
Delta Plus Virus – “கவலைப்பட வேண்டிய வைரஸ்”..?? எப்படித் தப்பிப்பது..??
பரிசோதனை டோக்கியோவுக்கு கிளம்பும் முன்னர் ஏழு நாட்களுக்கு இந்திய வீரர்களுக்கு தாங்கள் வசிக்கும் இடத்திலேயே கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். ஏழாவது நாள் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என உறுதி அளிக்கப்பட்ட பின்னரே இந்திய வீரர்கள் டோக்கியோவுக்கு விமானம் ஏற வேண்டும் என ஜப்பான் அரசு கட்டாயமாகத் தெரிவித்துள்ளது. இந்திய ரக வைரஸ் மற்ற நாட்டு வைரஸ் ரகங்களைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.