ஜூலை 31ம் தேதிக்கு பிறகே உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும்-உயர் கல்வித்துறை அமைச்சர் ..!!

 ஜூலை 31ம் தேதிக்கு பிறகே உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும்-உயர் கல்வித்துறை அமைச்சர் ..!!

ஜூலை 31ம் தேதிக்கு பிறகே உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இந்த செய்தியையும் படிங்க….

 PLUS TWO மதிப்பெண் கணக்கீடு; 10-ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு முதல்வர் முக்கியத்துவம் அளித்தது ஏன்..??- அமைச்சர் விளக்கம்..!!  

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப நடைமுறைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி அவர்கள்,”அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உதவும் வகையில் வழிகாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்க்கை நடத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்டு பின்னர் உறுதியாக அறிவிக்கப்படும்.

இந்த செய்தியையும் படிங்க….

BREAKING: யாருக்கெல்லாம் PLUS TWO மறு தேர்வு: அமைச்சர் விளக்கம்..!! 

மேலும்,CBSE 12-வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.அந்த மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் ஜூலை 31ம் தேதிக்கு பிறகே பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும்” என்று தெரிவித்தார்.

Leave a Comment