ஜிகா வைரஸ்: அறிகுறி & பரவலைத் தடுக்க ஒரே தீர்வு..!! - Tamil Crowd (Health Care)

ஜிகா வைரஸ்: அறிகுறி & பரவலைத் தடுக்க ஒரே தீர்வு..!!

 ஜிகா வைரஸ்: அறிகுறி &  பரவலைத் தடுக்க ஒரே தீர்வு..!!

தற்போது கேரளாவில் மீண்டும் ஜிகா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. இதனால், தமிழகத்துக்கும் ஜிகா வைரஸ் தொற்று பரவிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஜிகா வைரஸ், ஜிகா காய்ச்சல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

 இந்த செய்தியையும் படிங்க…

ரிசர்வ் வங்கி: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது தங்கம்..!! 

 ஜிகா வைரஸ் :

ஜிகா வைரஸ் என்பது டெங்கு காய்ச்சல் போல கொசு கடிப்பதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் நோய் ஆகும். ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 5-ல் நான்கு பேருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாமலேயே மறைந்துவிடும். ஒருவருக்கு மட்டும் அது காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும். பொதுவாக ஜிகா வைரஸ் தொற்று உள்ள கொசு கடித்தத்தில் இருந்து இரண்டு முதல் 14 நாட்களில் இந்த அறிகுறி வெளிப்படும்.

ஜிகா வைரஸ் தொற்று அறிகுறி:

ஜிகா வைரஸ் தொற்று இருந்தால்

 காய்ச்சல், 

உடலில் புள்ளிகள், 

மூட்டு வலி, குறிப்பாக கை, பாத இணைப்புகளில் வலி, 

கண்கள் சிவத்தல் போன்றவை ஏற்படும்.

 இதனுடன் தலைவலி, 

உடல் வலி, 

கண் வலி, 

சோர்வு, 

வயிற்று வலி

போன்றவையும் ஏற்படலாம்.

கொசுக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்:

ஜிகா வைரஸ் கிருமியை பரப்பும் கொசு டெங்கு கொசு போல நல்ல தண்ணீரில் முட்டையிடும். வீட்டைச் சுற்றி பிளாஸ்டிக் கிளாஸ், இளநீர் கூடு, பாட்டில், டயர் போன்ற தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்தி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் இந்த கொசுக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

 இந்த செய்தியையும் படிங்க…

 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு -தமிழக அரசு..!! 

கொசு பரவலைத் தடுப்பது மட்டுமே ஒரே தீர்வு:

  • கர்ப்பிணிகளுக்கு இந்த கொசு கடித்தால் ஏற்படும் பாதிப்பு கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
  •  கருச்சிதைவு கூட ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இந்த வகையான வைரஸ் கொசுக்கள் மூலமே பெரும்பாலும் பரவுகின்றன. டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுதான் இதையும் பரப்புகிறது. ஜிகா தொற்று உள்ள நபரை கடிப்பதன் மூலம் ஏடிஸ் கொசுவில் வைரஸ் தொற்றிக்கொள்கிறது. 
  • இந்த கொசு வேறு ஒரு மனிதனை கடிப்பதன் மூலம் அவருக்கும் பரவுகிறது.
  •  இது தவிர பாலியல் உறவு மூலமாகவும், ரத்தம் செலுத்துதல் போன்றவை மூலமும் இந்த வைரஸ் பரவும்.
  • இந்த காய்ச்சல் தீவிரமாக வெளிப்படும்போது பெரியவர்களுக்கு மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம். 
  • கர்ப்பிணிகளுக்கு இந்த தொற்று காரணமாக சிசுவின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம். 
  • இதனால் குழந்தை தலை சிறுத்துப் பிறக்கும். இதை மைக்ரோ செஃபாலே அல்லது தலை சூம்பிப்போதல் என்று சொல்வார்கள்.
  •  மூளை செல்கள் பாதிக்கப்படும், மூளை செல்கள் அளவு குறைந்துவிடும்.
  •  கண்கள் பாதிக்கப்படும். 
  • மூட்டுகள் பாதிக்கப்படும். 
  • மூட்டு செல்கள் அளவு குறைவதன் காரணமாக உடல் அசைவது கூட முடியாத சூழல் குழந்தைக்கு ஏற்படலாம்.

ஜிகா வைரஸ் பாதிப்புக்கு மருந்து இல்லை. தடுப்பூசியும் இல்லை. ஜிகா வைரஸ் தொற்றுள்ள கொசு பரவலைத் தடுப்பது மட்டுமே ஒரே தீர்வு!

Leave a Comment