ஜன் தன் வங்கிக் கணக்கு திட்டத்தின் மூலம் ரூ.130 லட்சம் காப்பீடு கிடைக்கும்..!! - Tamil Crowd (Health Care)

ஜன் தன் வங்கிக் கணக்கு திட்டத்தின் மூலம் ரூ.130 லட்சம் காப்பீடு கிடைக்கும்..!!

 ஜன் தன் வங்கிக் கணக்கு திட்டத்தின் மூலம் ரூ.130 லட்சம் காப்பீடு  கிடைக்கும்..!!

மத்திய அரசின் திட்டமான ஜன் தன் வங்கிக் கணக்கு திட்டத்தின் மூலம் ரூ.130 லட்சம் காப்பீடு வசதி பெறமுடியும்.

ஏழை, எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஜன் தன் கணக்கின் சிறப்பு:

  • ஜன் தன் கணக்கின் சிறப்பு என்னவென்றால் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூட நீங்கள் ரூ.5,000 வரை ஓவர் டிராஃப்ட் முறையில் பணம் எடுக்க முடியும். 
  • அதற்கு கணக்கு தொடங்கி ஆறு மாதம் ஆகியிருக்க வேண்டும். அதே போல் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே ஓவர் டிராப்ட் முறையில் பணம் எடுக்க முடியும்.
  • ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறுவதற்கு ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர் பரிவர்த்தனைகளில் நல்ல ரெக்கார்டு வைத்திருக்க வேண்டும்.
  •  கடன் மதிப்பீட்டில் பிரச்சினைகள் இருக்கக் கூடாது. 
  • முக்கியமாக ஜன் தன் கணக்கில் ஆதாரை இணைத்திருக்க வேண்டும்.
  • உங்களுக்கு அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் சென்று நீங்கள் மிகச் சுலபமாக இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கலாம்.

 அதற்கு 

  1. ஆதார், 
  2. பாஸ்போர்ட்,
  3.  ஓட்டுநர் உரிமம், 
  4. பான் கார்டு, 
  5. வாக்காளர் அடையாள அட்டை,
  6.  100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை

 உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.

ஜன் தன் கணக்கின் மற்றொரு சிறப்பம்சம்: 

  • ஜன் தன் கணக்கின் மற்றொரு சிறப்பம்சம்என்னவென்றால் காப்பீடாகவே உங்களுக்கு ரூ.1.30 லட்சம் கிடைக்கும். 
  • அதாவது, விபத்துக் காப்பீடு ரூ.1 லட்சம், பொதுக் காப்பீடு ரூ.30,000 என மொத்தம் ரூ.1.30 லட்சத்துக்கு காப்பீட்டு வசதி இதில் உள்ளது.

Leave a Comment