செப்டம்பரில்: ஆன்லைனில் சட்டக் கல்லூரி தேர்வுகள்- அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

 செப்டம்பரில்: ஆன்லைனில் சட்டக் கல்லூரி தேர்வுகள்- அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

சட்டக்கல்லூரி மாணவர்களுக்காக தேர்வுகளை ஜூலை, செப்டம்பர் மாதத்தில் இணையவழியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகளில் வழங்கி வரும் இளநிலை, முதுநிலை சட்டப்படிப்புக்கான தேர்வுகளை ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆன்லைன் வாயிலாக நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கான தேர்வு அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கடந்த மாதம் 30ஆந் தேதி முதல் கடந்த 7ஆம் தேதி வரை மாணவர்களிடம் இருந்து தேர்வு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில், இது தொடர்பாக பெயரளவு பட்டியல், வீடியோ வடிவிலான ஆன்லைன் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி தேர்வு தொடர்பான தகவல்கள் பல்கலைக்கழக இணையதளமான www.tndalu.ac.in-ல் 15-ந் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் தகவல்களுக்காக ஆன்லைன் தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் கிடைக்கப்பெறும் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்புகொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவல் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment