சென்னையில் அடுத்த- 25 நாட்களுக்கு கொரோனா அதிகரிக்கும்: ஆணையர்..!! - Tamil Crowd (Health Care)

சென்னையில் அடுத்த- 25 நாட்களுக்கு கொரோனா அதிகரிக்கும்: ஆணையர்..!!

 சென்னையில் அடுத்த- 25 நாட்களுக்கு கொரோனா அதிகரிக்கும்: ஆணையர்..!!

சென்னையில் அடுத்த 25 நாட்களுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் கொரோனா பரிசோதனை மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ், கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் தங்களது சொந்த வாகனங்களிலோ அல்லது மாநகராட்சி வாகனங்களின் உதவியுடனோ பரிசோதனை மையங்களுக்கு வரலாம் என்று கூறினார்.

இந்த செய்தியையும் படிங்க….

 கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியில் சிறந்தது எது?: மருத்துவர்கள் விளக்கம்..!!

சென்னையில் நேற்று மட்டும் 1,200 க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை மையங்களுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். தொற்று பாதிக்கப்பட்டோரில் 50 சதவீதம் பேரை பரிசோதனை மையத்தில் வைத்து சிகிச்சை கொடுப்பதே இலக்கு என்றும் பிரகாஷ் கூறினார்.

பாதிப்பு ஏற்பட்ட உடன் அனைவரும் பெரிய மருத்துவமனைகளுக்கு செல்லாமல் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப மருத்துவரின் அறிவுரைகளின் படி செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டால் நேரடியாக மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கவும் எனவும், சென்னையில் 3800 பேருக்கு தொற்று ஏற்படுகிறது வரும் நாட்களில் 4000 கடக்கும், அடுத்த 25 நாட்களுக்கு தொற்று அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.

Leave a Comment