சிறுபான்மையினர் கடன்பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் விசாகன்.!!
திண்டுக்கல்லில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த செய்தியின் படிங்க…
திமுக வாக்குறுதி: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 எப்போது..? – அமைச்சர் விளக்கம்..!!
- தனிநபர் கடன்,
- சுய உதவிக் குழுக்ளுக்கான கடன்,
- கைவினை கலைஞர்கள் மற்றும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
- இதில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருப்பின் ரூ.1.20 லட்சத்திற்குள்,
- கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
- மாணவர்களுக்கு 8, மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டியில் கல்வி கடன் வழங்கப்படும்.
- கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகியோர் https://dindigul.nic.in/forms ல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
- அதனை பூர்த்தி செய்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மதம்,
வருமானம்,
இருப்பிடச் சான்று,
ஆதார்,
கடன் பெறும் தொழில் குறித்த திட்ட அறிக்கைகளை இணைப்பது அவசியம்
என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.