சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கம்:தமிழகத்தில் உதயமானது..!!
தமிழில் சிறாருக்காக எழுதும் படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், கதைசொல்லிகள் இணைந்து தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த செய்தியையும் படிங்க…
உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை- இந்த வாரத்தில் முடிவு தெரியும்: அமைச்சர் பேட்டி..!!
குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சி சார்ந்து, குறிப்பாகக் கலை, இலக்கிய மேம்பாடு சார்ந்து செயல்படுவது இந்த சங்கத்தின் முதன்மையான நோக்கமாக உள்ளது. மேலும், அனைத்துக் குழந்தைகளும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும். இந்த நோக்கில் எழுத்து, கலை சார்ந்த முயற்சிகளில் சங்கம் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபடுதல்.
குழந்தைகளின் மீது செலுத்தப்படும் வன்முறை, ஒடுக்குமுறை, பாரபட்சமான அணுகுமுறை ஆகியவற்றுக்கு எதிராக எழுத்து, கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுதல், மரபு, வரலாறு, பொருளியல், அறிவியல், சூழலியல், அரசியல், பண்பாடு, கலைகள் சார்ந்து கடந்த காலம் – சமகாலத்தை வெளிப்படுத்தக்கூடிய குழந்தைகளுக்கான கலை, இலக்கியப் படைப்புகளைப் படைப்பது, வாசிப்பது, பரவலாக்குவது உள்ளிட்ட முயற்சிகளை முன்னெடுத்தல் ஆகியவை உட்பட குழந்தைகள் நலன் சார்ந்து பல நோக்கங்களை இந்த சங்கம் கொண்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் Work From Home பணியாளர்கள் கவனத்திற்கு..!!
இந்த அமைப்பின் மாநாடு இணையம்வழியே நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குத் தலைமையேற்ற எழுத்தாளர் உதயசங்கர், சங்கத்தின் தேவையையும் படைப்பாளிகள் ஒன்றிணைவதன் அவசியத்தையும் விளக்கினார். தொடர்ந்து பேசிய, சங்கப் பொதுச்செயலாளர் விழியன், குழந்தைகள் மீது எந்தவிதமான வன்முறை நிகழ்த்தப்பட்டால், அதற்கு எதிராகவும் குழந்தைகளின் நலன் சார்ந்தும் சங்கத்தின் குரல் ஒலிக்கும் என்று கூறியுள்ளார்.