கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்..??
கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்தே அதன் பக்கவிளைவுகள் பற்றி பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று பார்க்கலாம் .
பக்கவிளைவுகள்:
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு
உடல்வலி ,
காய்ச்சல் ,
தலைவலி
உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டு வரும் நிலையில் , சமீபத்திய அறிக்கை ஒன்று இந்த தடுப்பூசி பல புதிய அறிகுறி அல்லது பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும் என கூறி இருக்கிறது .
புதிய அறிகுறி:
கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டு கொண்டவர்களில் சிலர்
கையின் மேல் பகுதியிலும், கால்களிலும் வலி
இருப்பதாக கூறி இருக்கிறார்கள் . பெரியளவில் வலி இல்லாவிட்டால்இது ஒரு சிறிய பக்கவிளைவாக இருக்க கூடும் என்றாலும் வலியின் தீவிரம் அதிகரித்து காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும் .
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட சிலர் ஒரு கால் மூட்டில் மட்டுமே வலி அதிகமாக இருப்பதாக கூறி இருக்கிறார்கள் . ஐரோப்பிய மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி , கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு
வைரஸ் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன்
மூக்கு ஒழுகும் மற்றும்
மூக்கை பாதிக்கும் சில அறிகுறிகள்
கண்டறியப்பட்டு உள்ளது .
கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு சிலருக்கு
வயிற்றுப் பிடிப்புகளுடன்கூடிய குமட்டல் உணர்வு
அதனை தொடர்ந்து வாந்தி உள்ளிட்ட பக்க விளைவுகள் சேர்ந்து கொள்ளலாம் .
இத்தகைய செரிமான பக்க விளைவுகள் முன்பு பிற தடுப்பூசிகளிலும் காணப்பட்டாலும் , கோவிஷீல்ட் தடுப்பூசியை பொறுத்த வரை தடுப்பூசியின் முதல் டோஸுக்குப் பிறகு பக்கவிளைவாக சிலருக்கு வாந்தி ஏற்படுவதை காண முடிவதாக நிபுணர்கள் கூறி இருக்கின்றனர் .
சிலர் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு பசியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர் . 2 முதல் 1 வாரம் வரை பசியின்மையை மக்கள் உணர்வது ஆய்வில் தெரிய வந்துள்ளது . தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்து கொள்வது இந்த அறிகுறியைக் குறைக்க உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.